தென்சீனக் கடலில் கப்பல் விபத்து: 45 பேரை மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி
தென்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த 'கோய் நுயென் 18' என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள் அருகே உள்ள யோங்ஷு பாறைப் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்தக் கப்பலில் பயணம் செய்த 62 பேரில் 45 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்புப் பணிகளில் உடனடியாக உதவி வழங்கி 45 பேரைக் காப்பாற்ற உதவிய சீன அரசு மற்றும் அதன் மீட்புக் குழுவினருக்கு வியட்நாம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பாம் து ஹாங் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தேடும் பணி
சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் இணைந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் பல ரோந்துக் கப்பல்கள் மூலம் எஞ்சியவர்களைத் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்ந்து காணாமல் போன மற்றவர்களையும் மீட்பதற்கு இரு நாடுகளும் இணைந்து திறம்படச் செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri