பொது மக்களுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அவசர அறிவிப்பு
பொது அல்லது தனியார் சொத்துக்களை அழிக்காமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பில் நடத்தபட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களைக் காக்க முப்படைகளும் நிச்சயம் பாடுபடும். இந்த தருணத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து நிதானமாக இருக்க வேண்டும்.
தீ வைத்தல், பாரிய மோதல்கள் மற்றும் கொலை என்பவற்றில் ஈடுபட வேண்டாம். முடிந்தவை முடிந்து விட்டது.
இனிமேல், முப்படையினர் என்ற வகையில் நாட்டு மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்கள். மனிதநேயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். வன்முறை மற்றும் எதிர்ப்பிலிருந்து விடுபடுங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
