சஷி வீரவன்சவின் மேன்முறையீடு - உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரிப்பதற்கான திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (26.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 வருட சிறைத்தண்டனை
முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி அவர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், நவம்பர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கில் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri