முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 பேரையும் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோட்டை நீதிபதி பசன் அமரசேன, சீன நாட்டவர் உட்பட 5 சந்தேக நபர்களை இன்று (23) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
அனுத பண்டார, தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக 21ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்காக அவரை 24 மணி நேரம் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.