அரகலய வழக்கில் சிக்கிய தேசபந்து தென்னகோன் - உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா ஆகிய இருவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(23.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா ஆகிய இருவரும் அனுருத்த பண்டார என்ற இளம் சமூக ஆர்வலரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று (23) உயர் நீதிமன்றம் இவர்கள் செய்தது அடிப்படை உரிமைகளை மீறல் என தீர்ப்பளித்துள்ளது.
அனுருத்த பண்டார என்ற இளைஞர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this video