சற்றுமுன் நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச - திரண்டுள்ள முக்கிய ஆதரவாளர்கள்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று(23.07.2026) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதை தடுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் - காணி உரிமையாளர்கள் கவலை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனு விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தும் விசாரணைகள் சம்பந்தமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை இன்றைய தினத்திற்கு(23) மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது
இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ச அவருடைய ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், நாமல் ராஜபக்சவின், வருகையை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வருகை தந்துள்ளார்.




