யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கு விஜயம்
யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, விவரங்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அதன்பின் கொட்டகலை பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்குச் சென்று அங்கு தேயிலை தூள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது எனப் பார்வையிட்டதுடன், முதல் முறையாக லயன் குடியிருப்புகளுக்குச் சென்று அங்கு உள்ள இந்திய வம்சாவளி மலையக மக்களிடமும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இந்திய வீடமைப்பு திட்டத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறியதுடன், எதிர்வரும் காலங்களில் பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தொடர்பிலும் மக்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் கண்டிக்கான பதில் இந்திய உயர்ஸ்தானிகர்
கிருஷ்ண பிரசாத், இ.தொ.காவின் உப செயலாளரும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி,
கொட்டகலை பிரதேசசபை தலைவர் ராஜமணி பிரசாத், கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர்
பெருமாள் நேசன், கொட்டகலை பெருந்தோட்ட யாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி
ரொகான் எட்வட் போன்றோர் உடனிருந்தனர்.






ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri