நல்லாட்சி கால திட்டத்திற்கு சிறையில் இருந்தவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் : சாணக்கியன்
நல்லாட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு (Batticaloa) செயலக திட்டத்திற்கு சிறையில் இருந்தவர்கள் உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.
இன்று (23.06.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"2016ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட வேலைத்திட்டம், ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நல்லாட்சி காலத்தில் சிறையில் இருந்தவர்கள் இந்த வேலைத்திட்டத்திற்கு உரிமை கோருவது போல நடந்து கொள்வது மிக வேடிக்கையாக இருக்கின்றது.
அதேநேரத்தில், முறையான அழைப்பு இல்லாத காரணத்தினாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்படுத்தாத காரணத்தினாலும் நிகழ்வில் நான் கலந்து கொள்ளாது விட்டிருந்தேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |