சர்வதேச கிரிக்கெட்டில் சகிப் அல் ஹசனுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடை
பங்களாதேஸ்( Bangladesh) கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை ஆட்டக்காரர், சகிப் அல் ஹசன் தனது பந்துவீச்சு முறையை சுயாதீன மறுமதிப்பீட்டில் நிரூபிக்க தவறியதால், சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான சகிப், கடந்த பருவத்தில் இங்கிலாந்தின் கவுண்டி செம்பியன்சிப்பில் சர்ரே அணிக்காக விளையாடியபோது அவரது பந்துவீச்சு நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்
இதன்போது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைகளால், போட்டிகளில் பந்துவீசுவதற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இந்தத் தடையை பங்களாதேஸீக்கு வெளியே அனைத்து கிரிக்கெட்டுக்கும் அந்த தடையை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவின் சென்னையில் நடத்தப்பட்ட மறுமதிப்பீட்டு சோதனையில் சகிப் தோல்வியடைந்ததாக பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் துடுப்பாட்ட வீரராக செயற்பட சகிப் தகுதியுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |