பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்: தமிழ் நாட்டில் கடுமையான தண்டனைகள்
பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி,கடந்த 2025 ஜனவரி 25ஆம் திகதி முதல் தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.
யோசனைகள்
அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் வகையிலான 2 யோசனைகள் நிறைவேற்றப்பட்டன.
அந்த சட்டத்தின் அடிப்படையில், மீண்டும் மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைதானால் அவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
அதேபோன்று, பெண்கள் மீதான திராவக வீச்சு சம்பவத்துக்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
அத்துமீறல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பெண் ஒருவருக்கு தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்தால், 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடி சட்டத்தில் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
மரண தண்டனை
அதேபோல் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வடை சிறை தண்டனையும் பெற்று கொடுக்க முடியும். அதேநேரம் குறிப்பிடட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் யோசனையில் திருத்தம் செய்யப்பட்டது.
பெண் ஒருவரின் ஆடையை அகற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் குற்றத்திற்கு, இனி 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய உறவினரால் பெண் ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டால் அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் விதிக்கப்பட்;டு வந்த ஆயுள் தண்டனை, தற்போது 20 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்த குற்றத்திற்கான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |