அமெரிக்காவில் கல்விகற்கும் புலம்பெயர் மாணவர்களுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்ற குடிமக்கள் அல்லாத கல்லூரி மாணவர்கள் மற்றும் புலம்பெயர் குடியிருப்பை கொண்ட வெளிநாட்டினரை நாடு கடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளிப்பார் என்றுவெள்ளை மாளிகை கூறியுள்ளது.
மேலும் அவர், அடுத்தவாரம் யூத - விரோதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு தொடர்பான அறிக்கையில்,
நாசவேலை மற்றும் வன்முறை
"அமெரிக்க யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல்கள், தீ வைப்பு, நாசவேலை மற்றும் வன்முறையை தீவிரமாகத் தொடர" நீதித்துறைக்கு ட்ரம்ப் உத்தரவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஜிஹாதி ஆதரவு போராட்டங்களில் இணைந்த அனைத்து வெளிநாட்டினருக்கும், “நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்: நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம், நாங்கள் உங்களை நாடு கடத்துவோம்" என்று ட்ரம்ப் கூறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி வளாகங்களில் உள்ள அனைத்து ஹமாஸ் ஆதரவாளர்களின் மாணவர் விசாக்களையும் நான் விரைவில் இரத்து செய்வேன் என்றும் ட்ரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அமெரிக்க வளாகப் போராட்டங்களில் 97 சதவீதம் அமைதியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்த நியாயமான விமர்சனங்களை யூத எதிர்ப்புடன் இணைப்பது பாலஸ்தீன உரிமைகளுக்காக வாதிடும் மக்களை மௌனமாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பழக்கமான தந்திரமாகும் என்று போராட்டக்காரர்களில் பலர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
