இந்துமத கும்பமேளா விழாவில் நெரிசலில் சிக்கி பலர் மரணம்!
வட இந்தியாவில் (India) நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் இன்று (29) அதிகாலை ஏற்பட்ட சனநெரிசலில், பலர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு வார இந்து பண்டிகையின் மிகவும் புனிதமான நாளான இன்று, நதி நீரில் நீராட கோடிக்கணக்கான மக்கள் கூடியிருந்த வேளையிலேயே இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகியும், அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பு எண்ணிக்கையை அறிவிக்கவில்லை.
உயிரிழந்தோரின் உடல்கள்
என்றாலும், உள்ளூர் மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயிரிழந்தோரின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனைக்கு இதுவரை 40 உடல்கள் கொண்டு வரப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதுடன் மேலும் பல உடல்கள் எடுத்து வரப்படலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி இரங்கல்
மூன்று நதிகளின் சங்கமத்தை நோக்கி அடியார்கள் கூட்டம் அலைமோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலிலேயே பலர் காயமைடைந்துள்ளதுடன் இந்த இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன.
சடங்கு குளியலுக்காக அடியார்கள் அதிகளவில் விரைந்தபோது, ஆறுகளுக்கு அருகில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை அவர்கள் மிதித்தபோதும், பலர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
