இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க அறைகூவல்
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக குறித்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4ஆம் திகதியினை இலங்கை, தமது சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றது.
தாயகபூமி
ஆயினும், அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை, ஆங்கிலேயரிடமிருந்து சிங்கள பேரினவாதிகளுக்கு கைமாற்றப்பட்ட தினமாகும்.
வரலாற்றுரீதியாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள், ஒன்றிணைந்த பகுதிகள், இத்தீவின் மூத்த குடிகளான தமிழ் மக்களின் தாயக பூமியாக இருந்தது என்பதையும், அந்த தாயகபூமி இறையாண்மை உள்ள தனித்தேசமாக இருந்தது என்ற வரலாற்று உண்மையை மறுதலித்து எமது சுதந்திரம் சிங்கள தேசத்திடம் கையகப்படுத்தப்பட்ட நாளாகவே இந்நாள் உள்ளது - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
