கனடாவில் கடுமையான பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு
கனடாவில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒன்டாரியாவின் டொரன்ரோவில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடுமையான பனிப்பொழிவு
இந்த நிலைமை நாளை வரை நீடிக்கும் எனவும், தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பான முறையில் வீடுகளில் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விமான சேவைகள்
கடந்த சில தினங்களாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெருமளவு பயணிகள் விமான நிலையத்தில் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே காலநிலை தொடர்பான அறிவுறுத்தல்கள் அறிந்து செயற்படும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.