நுவரெலியாவில் கடும் வறட்சி! நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தாழிறக்கம்
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சியான காலநிலை நிலவி வருவதனால் வெப்பநிலை அதிகரித்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைந்து வருவதாக மின்சாரதுறைச் சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வறட்சியான காலநிலையினை அடுத்து காசல்ரி, மாவுசாக்கலை, கெனியோன் விமலசுரேந்திர லக்சாபன நவலக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது
காசல்ரி நீர்த்தேக்கத்தில் மாத்திரம் தற்போது 34 அடி நீர் தாழிறங்கியிருப்பதாகவும் ஏனைய நீர்த்தேக்கங்களில் கனிசமான அளவு நீர் தாழிறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வறட்சி
இதே பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. ஹட்டன் பகுதியில் குடிநீர் விநியோகம் சுமார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடைவை மாத்திரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன.

இதனால் ஹட்டனில் உள்ள ஒரு சில உணவகங்கள் குடிநீரினை பணம் செலுத்தி பிரத்தியேகமாக பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு ஹட்டனை பிரதேசமான ரூவன்புர,அலத்கம கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
குடிநீர் தட்டுப்பாடு
இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக வறட்சியான காலப்பகுதியில் காடுகளுக்கு தொடர்ச்சியான தீ வைக்கப்படுவதனால் பல நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
இதேவேளை வறட்சியான கலநிலையினையடுத்து நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டமும் குறைவடைந்து அதன் அழகும் குன்றிப் போய் காணப்படுகின்றன.

இந்த வறட்சியான காலநிலை தொடர்;ந்து சில வாரங்களுக்கு நீடிக்குமேயானால் மின் உற்பத்தியும் பாதிக்கக்கூடும் என பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தோடு குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைவதற்கான நிலைமை உள்ளதாகவும் இதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam