யாழில் தீயிட்டு எரிக்கப்பட்ட பேருந்து: இரு சந்தேகநபர்கள் கைது
யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (11.03.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தொழில்சார் முரண்பாடே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முறைப்பாடு பதிவு
இந்தத் தீவைப்புச் சம்பவத்தில் பேருந்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, துரிதமாகச் செயற்பட்ட கொடிகாமம் பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.




