முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை : 7 பேர் கைது
முல்லைத்தீவில் (Mullaitivu) சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த கைது நடவடிக்கையானது, வட்டுவாகல் கடற்படையினரின் கடல் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வட்டுவாகல் பகுதியில் 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலை
மேலும், நாயாறு கடற்படையினரால் மூன்று படகுகளும், கடலில் ஒளிபாச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, புல்மோட்டை, கொக்குளாய், மாத்தளன் பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கமைய, கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த கடற்றொழிலாளர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை திகதியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
