யாழ். நகரில் விஷ பூச்சி கடித்து ஒருவர் உயிரிழப்பு
யாழ்.நகரில் (Jafffna) வசிக்கும் நபர் ஒருவர் பூச்சி கடித்ததில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் (Jafffna) சேர்ந்த 52 வயதுடைய சண்முகவேல் அருண்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் காதுக்குக் கீழே பூச்சி கடித்ததில் கடுமையான வலி ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டார்.
எனினும், கடித்தது பூச்சி என நோயாளி கூறியுள்ள நிலையில், எந்த வகையான பூச்சி என்பதை நோயாளியால் கண்டறிய முடியவில்லை.
இதற்கிடையில் நேற்றுமுன்தினம் நோயாளிக்கு வலி தீவிரமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
