இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை - வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்
இந்தோனேசியா (Indonesia) உள்ள ருவாங் எரிமலை (Volcano) பலமுறை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை (Tsunami warning) விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று (17.4.2024) சுலவெசி தீவில் உள்ள எரிமலை 5 முறை வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை (Tsunami warning) ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
எந்நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ள ருவுங் எரிமலை (Volcano) இந்தோனேசியாவின் (Indonesia) வடக்கு சுலவேசி பகுதியில் உள்ள ஒரு தீவில் உள்ளது.
இந்நிலையில் தற்போது எரிமலை வெடித்து எரிமலைக்குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. 2,378 அடி உயரமுள்ள எரிமலையில் இருந்து குறைந்தது 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
எரிமலை வெடிப்பால் சுனாமி
இதன் காரணமாக, எரிமலையைச் சுற்றி வசித்த சுமார் 11,000 மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் (Indonesia) அனக் க்ரகடாவ் எரிமலை வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமி ஏற்பட்டது. அதன் பின் மலையின் சில பகுதிகள் கடலில் வீழ்ந்து 430 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.