யாழ். கடலில் குழந்தை பிரசவித்த பெண்
யாழ்ப்பாணம் (Jaffna) - நயினாதீவை (Nainativu) சேர்ந்த பெண்ணொருவர் கடலில் பயணித்தவாறு குழந்தை பிரசவித்துள்ளார்.
இந்த சம்பவமானது, நேற்றைய தினம் (17.04.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்புலன்ஸ் படகு
பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததன் காரணமாக பொதுமக்கள் பெண்ணை போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
அதேவேளை, கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை
இந்நிலையில், படகில் பயணித்த பெண்களின் உதவியுடன் குழந்தையை பிரசவித்துள்ளார்.
மேலும், படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதற்கமைய, தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |