இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : எழுவர் கைது(Photo)
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அக்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள், ஏலக்காய், பீடி இலை, கஞ்சா போன்றவை கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனைத் தடுக்க கடலோர காவல் குழும பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனிப்படை பொலிஸார் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி கடற்கரையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடற்கரையில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்திக் கொண்டு செல்ல முயன்ற சுமார் 450 கிலோகிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.2.5 கோடி எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் கணேசன் (49), முருகேசன் மகன் மாரிகுமார் (32), சிதம்பரத்தைச் சேர்ந்த ஜஹாங்கிர் பாதுஷா மகன் மன்சூர் அலி (37), தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பன்னீர்செல்வம் (42), தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலோன் காலனி கந்தசாமி மகன் யோகேஸ்வரன் (41), லூர்தம்மாள் புரம் முருகன் மகன் இசக்கி முத்து (40), மேல அழகாபுரி பெருமாள் மகன் வினீத் (25) ஆகிய 7பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 9
கைப்பேசி, மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri