தென்கிழக்கு பல்கலைக்கழகம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
மறு அறிவித்தல் வரை விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1 ஆம் வருட பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியெறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியெறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியசாலைக்கு சிகிச்சை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஐவர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர்- தாக்குதலுக்குள்ளான நிலையில் செவ்வாய்க்கிழமை (15) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த தாக்குதலின் காரணமாக ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்களில் நால்வர் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் குறிப்பிட்டார்.
மறு அறிவித்தல்
இதேவேளை ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 4 மாணவர்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.
மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையிலே மறு அறிவித்தல் வரை விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1 ஆம் வருட பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியெறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.




ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
