உலக சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
எந்த அரசாங்கமும் செய்யாத உலக சாதனையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அதிகாரத்தை கைப்பற்றலை எந்த கட்சியும் செய்யவில்லை உலகத்தில் எந்த அரசாங்கமும் செய்யவில்லை.
கிழக்கில் பிள்ளையானுடன் ஆட்சி,குருநாகலில் ரிஷாட்டுடன்,காலியில் மொட்டுவுடன் பேருவளையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நுவரெலியாவில் தொண்டமானுடன் இவ்வாறே உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் மற்றும் மகிந்த ஆகியோர் இவ்வாறு ஆட்சி அமைக்கவில்லை என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் கன்னித்தன்மைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
