சட்டவிரோத வாகன வழக்கு: சுஜீவ சேனசிங்கவிற்கு பிணை அனுமதி
சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட சுமார் ரூ. 100 மில்லியன் பெறுமதியுள்ள சொகுசு வாகனமொன்று சார்ந்த வழக்கில் இன்று(16) நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுஜீவ சேனசிங்க முன்னிலையாகியதை அடுத்து, நீதவான் நிலுபுலி லங்கபுர அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
பிணை அனுமதி
இதற்கு முன்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID), சுஜீவ சேனசிங்க வெளிநாட்டில் சிகிச்சைக்காகப் பயணம் செய்ததை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கும்படி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், மனோ கணேசன், முஜிபுர் ரஹுமான், உள்ளிட்டோர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
