கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்
புதிய இணைப்பு
வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டை, மட்டக்குளியாவை சேர்ந்த மனோஜ் என்ற நபர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் குடு ரோஷன் என்ற நபரை குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ள காட்சி
கொலை நடந்த இடத்திற்கு வந்த துப்பாக்கித்தாரி நடனமாடியபடியே வந்து பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், குடு ரொஷன் அணிந்திருந்ததை போன்ற உடையை அணிந்திருந்தமையினால் உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்போது பொரள்ளை, வானத்தமுல்லை பகுதியை சேர்ந்த வானத்தே சுமேத என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிதாரி தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முதலாம் இணைப்பு
வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
விசாரணையில் வெளியான தகவல்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல்
இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri