மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மற்றும் பொதுஜன பெரமுண கட்சிகளின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலாகே வசந்த என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
வெலிகெபொல ஹட்டங்கல பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக வழக்கு விசாரணையொன்றை எதிர்கொண்டிருந்த நிலையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
அதனையடுத்து இன்றைய தினம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றத்தில் இன்று குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
