கொழும்பிலுள்ள பல வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்
கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் தங்கம் நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வீட்டு வேலை செய்வதாகவும், வீடுகளில் வேலை இருப்பதாக பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களை பார்த்து அந்தந்த வீடுகளுக்கு சென்று பொருட்களை திருடிச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் கொள்ளை
குறித்த பெண்ணுக்கு எதிராக தெஹிவளை, ஹொரணை மற்றும் மிரிஹான பொலிஸ் நிலையங்களில் பல திருட்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபரால் திருடப்பட்ட 2 தங்க வளையல்கள், 2 தங்க நெக்லஸ்கள் மற்றும் தங்க பெண்டன்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
