ரிஷாட் வீட்டுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் - மேலும் இரு பெண்களின் மரணத்தால் சர்ச்சை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுயூதினின் வீட்டில் பணியாற்றும் போது 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் இரண்டு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு இளம் பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் மற்ற பெண் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் அண்மையில் ரிஷாட் வீட்டில் பணியாற்றிய சிறுமி உடலில் தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது அவருக்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சிறுமி தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டமைக்கான விசேட காரணம் ஒன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசியம் ஏற்பட்டால் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடல் மீள எடுத்து அதனை முழுமையாக விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரிஷாட் வீட்டில் இறுதியாக உயிரிழந்த சிறுமியின் மாதாந்த சம்பள பணத்தை தரகர் ஷங்கர் என்பவரே முழுமையாக பெற்றுள்ளார் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஷங்கர் என்பவருக்கு சொந்தமான வங்கி கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாதாந்தம் ரிஷாட்டின் வீட்டில் இருந்து இந்த கணக்கிற்கே பணம் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இந்த சிறுமியின் தாய் ஷங்கர் என்பவரிடம் 30ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டுள்ளார். அந்த பணத்தை செலுத்திக் கொள்ள முடியாமல் தனது மகளை பணிப்பெண்ணாக இரண்டு மாதங்களுக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னரதே இந்த சிறுமியை ரிஷாட் பதியூதினின் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு ஷங்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அது முதல் சிறுமி உயிரிழக்கும் வரை இந்த வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார்.
அத்துடன் அவர் கடுமையாக சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் இந்த சிறுமி, துடைப்பக் கட்டை உடையும் வரை தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென திவயின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 30 பேர் வரையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
