நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு
“தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசு தமிழ் இளைஞர்களுக்கு எதிராக இராணுவம் மூலம் தாக்குதல்களை மேற்கொள்கின்றது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றச்சாட்டு
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவரான மனநலம் குன்றிய பொதுமகன் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் முரண்பட்டுள்ளார்.
இதன்போது, அங்கு வருகைதந்த விசுவமடு 572 ஆம் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் குறித்த பொதுமகனை தமது முகாமுக்கு இழுத்து சென்று பலமாக தாக்கி இரத்தக்காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை அவதானித்த அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இராணுவ காவலரணுக்கு அருகே சென்று குறித்த பொதுமகனை தாக்கியமைக்கான காரணத்தை கேட்டபோது இராணுவத்தினர் அவர்களையும் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.
அதன்பின்னர் இரு கனரக வாகனங்களில் பொல்லுகளோடும் கூரிய ஆயுதங்களோடும் அழைத்துவரப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் இந்த சம்பவத்தோடு எவ்வித தொடர்புமற்ற வீதியால் சென்றவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
இதில் 6 பேர் இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்றாட சீவியத்துக்காக, விவசாயத்துக்காக நாள் முழுதும் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் மீது காரணமின்றி இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளமை அப்பகுதி மக்களிடையில் பாரிய அதிருப்தியையையும் அதியுச்ச கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக பிரமானந்தமாறு பிரதான வீதியின் மூன்று இடங்களிலும், விசுவமடு சந்நிதியிலும் சமபவம் இடம்பெற்ற இராணுவ காவலரண் முகாமுக்கு அருகிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
எனவே, சமூக வன்முறைகளுக்கு வழிகோலும் வகையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சமப்வத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும், பொதுப் பயன்பாட்டு இடங்களில் இராணுவ தலையீடுகளை தவிர்ப்பதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆவணம் செய்யுமாறு இந்த உயர்ந்த சபையினூடாக ஜனாதிபதியையும் சமபந்தப்பட்ட அமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
காலிமுகத்திடல் போராட்டம்
இந்த நாட்டிலே காலிமுகத்திடலிலும் ஒரு போராட்டம் நடக்கின்றது. தென்பகுதியிலுள்ள சிங்கள இளைஞர்கள் போராட்டங்கள் நடத்துகின்றார்கள். பொலிஸாரின் காவலரண்களைத் தள்ளுகின்றார்கள். இராணுவத்தினரைத் தள்ளுகின்றார்கள்.
இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும்,முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை உங்களது பிள்ளைகளாக பார்க்கின்றீர்கள். தமிழர்களை மாற்று முகமாக பார்க்கின்றீர்கள்.
நாடு முழுவதும் மக்கள் எரிபொருளுக்காக தெருக்களில் காத்திருக்கின்றார்கள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் வரையில் வீதிகள் எல்லாம் திருவிழாக்கள் போல் 3, 4 நாட்களாக எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கின்றார்கள்" என கூறியுள்ளார்.
தமிழர்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர் சரத் வீரசேகரவே! நாடாளுமன்றத்தில் சிறீதரன் சீற்றம் |
எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
நன்றி நவிலல்
திருமதி பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி
தொண்டைமானாறு, கொழும்பு, தெல்லிப்பழை, Wellington, New Zealand
28 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் முருகதாஸ்
கோண்டாவில் மேற்கு, பிரான்ஸ், France, London, United Kingdom
28 Jun, 2012
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021