தமிழர்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர் சரத் வீரசேகரவே! நாடாளுமன்றத்தில் சிறீதரன் சீற்றம் (Video)
புத்தபகவான் ஆக்கிரமிப்பு கருவியாக பயன்படுத்தப்படுகிறார்
கருணை, காருண்யம் கொண்ட புத்தபகவான், ஒரு ஆக்கிரமிப்பு கருவியாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் இந்த கருத்தை இன்று நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் புத்தபகவானின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் மற்றும் விஸ்வமடு பகுதியில் படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு சரத் வீரசேகர பதிலளித்து பேசிய நிலையில், அதற்கு எதிர் கருத்து வெளியிட்ட போதே சிறீதரன் இந்த விமர்சனத்தை வெளியிட்டார்.
சிங்களவர்களுக்கு வேறு சட்டம், தமிழர்களுக்கு வேறு சட்டம்
இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசாங்கம், தமிழர்களை மாற்று முகமாக பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
