எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முரண்பாடு
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள இராணுவ காவல் அரணில் இருந்த இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடொன்று எற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசுவமடு எரிபொருள் நிலையத்தில் 18 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நஷ்டயீடு
இதன்போது பொதுமக்கள் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசியுள்ளதாகவும் இதனையடுத்து இராணுவத்தினர் மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட தமது குடும்பங்களுக்கு நஷ்டயீட்டினை பெற்றுத்தர வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தமது முறைப்பாட்டை மக்கள் பதிவு செய்யவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
