செந்தில் தொண்டமானின் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் செய்தியாகும்.
மகிழ்ச்சியான தருணம்
சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின் மூலம் தவறான புரிதலை நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கை நெறிக்கு இந்தப் போதனைகள் வழிகாட்டுகின்றன. மானிட சமூகம், ஒவ்வொருவர் மீதும் இரக்க குணத்துடனும் அன்புடனும் வாழ்தல் மற்றும் சமுதாயத்தில் அல்லலுரும் மக்களுக்கு ஆதரவளித்தல் மூலம் இறைவனின் அன்பை உண்மையாகவே ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் கண்டுகொள்ள முடியும் என்பதை இயேசு கிறிஸ்து போதித்தார்.
சமூக ரீதியாக நத்தாருடன் ஒன்றிணைந்த கலாசாரம், ஒரு மகிழ்ச்சியான தருணமாகவும், நட்புணர்வின் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது.
அதனால், நத்தார் கலாசார விழுமியங்கள், இன, மத பேதமின்றியும் வயது வேறுபாடின்றியும் உற்சாகமூட்டுகின்றன.
எனவே நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பின் நற்செய்தி கிடைக்கட்டும். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
