வத்திக்கானில் சிறப்பாக இடம்பெற்ற புனித கதவு திறப்பு விழா
சிறப்பு ஜூபிலி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) புனித கதவைத் (Holy Door) திறந்து வைத்துள்ளார்.
வத்திக்கானில் (Vatican) நேற்று (24) நடைபெற்ற விழாவில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கான சிறப்பு ஜூபிலி ஆண்டை பாப்பரசர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
வத்திக்கானில் உள்ள செங்கற்களால் கட்டப்பட்ட புனித பீட்டர் பேராலயத்தின் புனித நுழைவாயிலே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
ஜூபிலி ஆண்டு
ஜூபிலி ஆண்டானது, 25 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருகின்றது. உலகம் முழுவதிலுமிருந்து 30 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ரோம் நாட்டிற்கு சென்று தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த நுழைவாயிலை கடந்து செல்வார்கள்.
Pope Francis Opens the "Holy Door" aka portal on Christmas Eve pic.twitter.com/uWwTTexMrO
— Vision4theBlind (@Vision4theBlind) December 24, 2024
அதேவேளை, எதிர்வரும் 2026ஆம் ஜனவரி 6ஆம் திகதியுடன் இறைவனின் திருவுருவப் பெருவிழாவில் புனித நுழைவாயிலின் மூடுதலுடன் ஜூபிலி ஆண்டு முடிவடையும்.
முன்னதாக, கடந்த 2000ஆம் ஆண்டு பாப்பரசர் புனிதர் இரண்டாம் ஜோன் போலினால் (Pope Saint John Paul II) ஜூபிலி கொண்டாட்டத்திற்காக புனித கதவு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |