கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரித்துள்ள தொடர் குற்றச்செயல்கள்
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது, நிலத்தடி மின்சார வடங்கள் அறுக்கப்பட்டு திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் பிறரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களால் சாலையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
பல சந்தர்ப்பங்களில் அறுந்து கிடந்த மின் வடங்களின் பாகங்கள் திருத்தப்பட்ட போதும், திருத்தப்பட்ட பாகங்களும் திருடர்களால் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்காணிப்பு பணி
இந்நிலையில், தற்போது இரவு பகலில் திருடர்கள் இந்த திருட்டில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது என்றும், மின்கம்பிகளை அறுத்துக்கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் பிடித்து பொலிஸாரிடம் பலமுறை ஒப்படைத்தும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த இடைவிடாத மின் வட திருட்டை நிறுத்தும் வகையில், நெடுஞ்சாலைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் கட்டுநாயக்க - கொழும்பு நெடுஞ்சாலையில் இரவு நேர நடமாடும் கண்காணிப்பு பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை வரை இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், இந்த விஜயங்களின் போது அதிவேக நெடுஞ்சாலையின் நிலத்தடி மின் பாதை அமைப்பில் இடம்பெறும் நாசவேலைகள் அவதானிக்கப்பட்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam