இருதய நோயாளிகளுக்கு மீளுயிர் கொடுக்கும் செந்தில் குமரன் நிவாரண அமைப்பின் மாபெரும் நிகழ்ச்சி MGR 109
கனடாவை தளமாக கொண்டு இலங்கையின் தமிழர் பிரதேசமெங்கும் இருதய நோயுடன் மரணத்தை எதிர்நோக்கி உள்ள ஏழை நோயாளிகளுக்கான இலவச இதய சத்திர சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்கள், நன்கொடை வழங்குநர்கள் என்று பலரின் உதவியோடு ஒருங்கமைத்து உயிர்களை காத்து கொண்டிருக்கின்றது செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு.
இற்றை நாள் வரை 175 ற்கும் மேலான நோயாளிகளுக்கு மறு வாழ்க்கையினை கொடுத்ததுடன், முல்லைத்தீவில் மல்லாவி, மாஞ்சோலை, சாவகச்சேரி என்று பல மருத்துவமனைகளுக்கு ரத்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள், நிலையங்கள் என்று வாழ்க்கையே சவாலாக மாறிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அவசியம் தேவைப்படும் மருத்தவ தேவைகளை நிறைவு செய்து கொண்டிருக்கின்றது.
வெற்றிகரமாக நடத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள்
குறிப்பாக சென்ற ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சைக்கு இவ்வமைப்பு அமெரிக்காவிலிருந்து தருவித்து வழங்கிய விசேட இயந்திரத்தினூடாக இதுவரை 250 இருதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது.
இவைகள் மட்டுமல்லாது வறுமை கோட்டின் கீழிருக்கும் நோயாளிகளுக்கான வாழ்வாதாரங்கள், கிளிநொச்சியில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக இயங்கும் நடமாடும் மருத்துவ சேவை, இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு என்று இவர்களின் உதவி நீண்டு கொண்டே போகிறது.
மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு இவ்வமைப்பினால் இதுவரை 1 மில்லியன் கனடிய டொலர்களுக்கு மேலாக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாபெரும் இசை நிகழ்வு
இவ்வாண்டும் மக்களிடம் நிதியினை கோரி மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் MGR அவர்களின் பெயரால் மாபெரும் இசை நிகழ்வினை லங்காசிறி, தமிழ்வின், IBC தமிழ் பிரதான ஊடக அனுசரணையுடன் வெள்ளி Dec 12 மாலை ஸ்கார்பிரோ கனடாவில் ஒழுங்கு செய்துள்ளார் நிவாரண அமைப்பின் ஸ்தாபகரும் பாடகருமான செந்தில் குமரன்.
செந்தில் குமரனுக்கு பொது மக்களிடையே ஆதரவு பெருகி வருவதனை கண் கூடாக பார்க்க கூடியதாக உள்ளது. தம் சொந்த செலவில் இசை நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, சேரும் நிதி அனைத்தையும் துல்லியமாக கணக்குகளுடன் சமூக ஊடகங்களில் அறியத் தருவது மற்றும் சேர்ந்த நிதிகளை தகுந்த தேவையுற்றோருக்கு வழங்குவது போன்றவையே இதற்கான காரணமாகும்.
மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்
நாளை வெள்ளி மாலை நடைபெற இருக்கும் இந்த இசை நிகழ்விற்கு டொரோண்டோவின் முன்னணி இசை குழுவான Lathan Brothers பின்னணி இசை வழங்குவதுடன் பல திறமையான பாடகர்கள் இதில் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்கள். வாழ்த்துக்கள்.
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam