டயானா கமகேவின் திருமணம் தொடர்பில் பரபரப்பான குற்றச்சாட்டு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இலங்கைப் பிரஜாவுரிமை மாத்திரமன்றி இந்நாட்டுத் திருமணமும் பொய்யானது என்று பரபரப்பான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
டயனா கமகேவின் பிரஜா உரிமைக்கு எதிராக வழக்குத் தொடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்துச் செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய அபிநவ மக்கள் முன்னணியின் தலைவர் ஓஷால ஹேரத் என்பவரே இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வ திருமணம்
அதன்படி டயானா கமகே என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சேனக டி சில்வா, மற்றுமொருவரை சட்டப்பூர்வ திருமணம் செய்து கொண்டவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேனக டி சில்வா, உக்ரேனிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் இருப்பதாக ஓஷால ஹேரத் கூறுகிறார்.
அந்த பெண் தற்போது இலங்கையில் உள்ள வீடொன்றில் இருப்பதாகவும், இந்த இரண்டு பெண்களுடன் சேனக டி சில்வா வாழ்ந்து வருவதாகவும் ஓஷால ஹேரத் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பூர் பகுதியில் கைதான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |