கனகராயன் ஆற்றினை பார்வையிட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள்
கனகராயன் ஆற்றினை துப்பரவு செய்யும் பணிகளை விரைவு படுத்தி முன்னெடுக்கும் வகையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் குறித்த பகுதிகளை சென்று பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சி- இரணைமடுக்குளத்தில் இருந்து வான் கதவுகள் ஊடாக திறந்து விடப்படுகின்ற மேலதிக நீர் மற்றும் அனர்த்தங்களின் போது ஏற்படுகின்ற வெள்ள நீர் சென்றடையும் கனகராயன் ஆறு நீண்ட காலமாக துப்புரவு செய்யப்படாது காணப்பட்டது.
இதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களை எதிர்காலத்தில் குறைக்கும் பொருட்டு தற்போது கனகராயன் ஆற்றினை துப்புரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கலந்துரையாடல்
அந்த வகையிலே குறித்த பணிகளை விரைவாக முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இன்றைய (30-12-2025)தினம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கிளிநொச்சி இரணை மடு நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் விவசாயிகள் கரைச்சி பிரதேச செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் என பலர் சென்று குறித்த பகுதியில் விவசாயி களுடன் கலந்துரையாடி குறித்த பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.





உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri