செம்மணி மனிதப் புதைகுழி அறிக்கையில் முரண்பாடு : தொடரும் சர்ச்சை
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த மூன்றாவது இடைக்கால அறிக்கையில், முன்னைய அறிக்கைகளுடன் முரண்படும் விடயங்கள் காணப்படுவதாகத் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் தொடர்பில் அடுத்த நீதிமன்றத் தவணையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மேற்பார்வை இல்லாமல்
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே ராஜ்சோமதேவா தன்னுடைய 3ஆவது இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

முன்னார் கொடுக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளிலும் மனிதப் புதைகுழி என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு குற்றச் செயல்கள் நடைபெற்றதற்கான தடயங்கள் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் 3 ஆவது இடைக்கால அறிக்கையிலே முன்னர் சமர்ப்பித்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிட்ட விடயங்களுக்கு மாறுபட்ட வகையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஆனால் இது ஒரு அடைக்கால அறிக்கை. அதுவும் ஒரு தொல்லியல் நிபுணரின் இடைக்கால அறிக்கையாகவே உள்ளது. ஆகையால் ஏற்கனவே நாம் சென்னதைப் போல இதற்கு சர்வதேச நிபுணத்துவம் தேவையாக உள்ளது.
சர்வதேச மேற்பார்வை இல்லாமல் செய்யப்படும் இந்த அகழ்வாராட்சியிலே ஒருவர் இவ்வாறான ஒரு அறிக்கையை கொடுத்திருப்பது மிகவும் பாதிப்பதை ஏற்படுத்துகின்றது. உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதாகிறது.
விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு
மேலும் அந்த அறிக்கையில் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் தொற்றுநோய் காரணமாகவும், அனர்த்தங்கள் காரணமாகவும் உயிரிழந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் அவ்வாறு தொற்றுநோய் மற்றும் அனர்த்தங்களால் பெரும் தொகையான (500இற்கும் மேற்பட்ட) மக்கள் உயிரிழந்தமைக்கான பதிவுகள் உள்ளனவா என்பது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிகாரிகளை நேரில் சந்தித்து கேட்டபோது, அவ்வாறான பெரும்தொகையான மக்கள் உயிரிழந்தமை தொடர்பான எந்த ஒரு தகவல்களும் வைத்தியசாலை பதிவேட்டில் இல்லை.

நோய்கள் உள்ளிட்ட வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு வைத்தியசாலையால் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கே சடலங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றமையும், அந்த பதிவேடுகளில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்திடம் இவ்விடயங்கள் தொடர்பில் தகவல்கள் சேகரித்த போது, அது ஒரு இந்து மயானம் இங்கு சடலங்கள் புதைக்கப்படுவதில்லை என்றும், இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த குறித்த இந்து மயானம் 2011 ஆம் ஆண்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், அன்றிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் அங்கு பெரும்தொகையான சடலங்களை புதைத்தமை அல்லது அடக்கம் செய்யப்பட்டமைக்கான எந்த ஒரு பதிவுகளும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்திசாலை மற்றும் சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்திடம் உள்ள குறித்த தகவல்கள் அனைத்தும், சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சேகரித்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan