யாழில் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் எனும் தலைப்பிலான கருத்தரங்கு
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் எனும் தலைப்பிலான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கு, நேற்று(09.08.2025) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் பிரதம ஆலோசகர் கலாநிதி க.விக்னேஷ்வரன், முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ம.செல்வின், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்
இந்த நிகழ்வில் பல்வேறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam