றீ(ச்)ஷா பண்ணையில் விசேட தேவையுடையோருக்காக இடம்பெற்ற விழிப்புணர்வு கூட்டம்
சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில் இயலாமையுடன் கூடிய நபர்களின் சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும் நிகழ்வு இயக்கச்சி றீ(ச்)ஷா இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு, நேற்றையதினம் (19.10.2024) இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் இயலாமையுடன் கூடிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இயலாமை உள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி முன்மொழியப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பான முன்வைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
கலந்து கொண்டோர்
குறித்த பரிந்துரையாடலில் இயலாமையுடன் கூடிய நபர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தல், உரிமைகள், கல்வி சுகாதாரம், வாழ்வாதாரம் , மருத்துவம், சம்பந்தமாக அவர்கள் அடைய வேண்டிய தேவை, அவற்றை பூர்த்தி செய்ய தேவையான விடயங்கள், செய்ய இயலாமையாக, சவாலாக இருக்கும் விடயங்களை எவ்வாறு தீர்ப்பது தொடர்பான பரிந்துரையாடல் விழிப்புணர்வு செயற்பாடு நடைபெற்றுள்ளது.
மேலும் இதன்போது, சிறப்பு விருந்தினராக றீ(ச்)ஷா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன், பிரதம விருந்தினராக வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் வாகீசன், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.



























பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
