கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - சர்தாபுர பகுதியில் நேற்றையதினம்(17) இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
விளக்கமறியல் உத்தரவு
இந்தநிலையில், திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இன்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை - கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் திலீபனின் உருவ சிலையை கொண்டு வரும்போது சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் 35இற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மீது ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிய வருகின்றது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri