மனித வெடிகுண்டுகளாக மாறிய 2 பெண்கள்.. வெளியான புகைப்படங்கள்
மனித வெடிகுண்டுகளாக மாறிய 2 பெண்களின் புகைப்படங்களை பலூசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதற்றநிலை
இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டுகளாக மாறிய ‘fidayee’ (தற்கொலைப்படை) குழுவினரின் புகைப்படங்களை BLA வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை வெளிப்படையாக உலகிற்கு காட்ட முயற்சித்துள்ளனர்.

ஒருவர் 24 வயதான ஆசிஃபா மெங்கல் (Asifa Mengal) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொரு பெண்ணின் பெயர் இன்னும் தெரியவில்லை.
இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளன. ISI மற்றும் பாதுகாப்பு படையினர் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பலூசிஸ்தான் பகுதியில், நீண்ட காலமாக சுயாட்சி மற்றும் அரசியல் உரிமைகள் கோரி ஆயுதப்படை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
BLA, அவற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்கள், அந்தப் பகுதியில் நிலவும் பதற்றநிலையை மேலும் தீவிரப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா, ரசிகர்கள் ஷாக் Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri