காணி அபகரிப்புகள் இந்த அரசு மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் - செல்வம் அடைக்கலநாதன்

Parliament of Sri Lanka Vavuniya Selvam Adaikalanathan Eastern Province Northern Province of Sri Lanka
By Rakesh Jul 09, 2025 07:05 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

அரசு ஓர் கொள்கையில் இருக்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகின்றார்கள். மாறுபட்ட கொள்கைகளால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்

செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்

நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளிலும் பல்வேறு வழிகளில் நில அபகரிப்பில் ஈடுபடுகின்றன.

selvam adaikalanathan

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுக் காணிகளில் உள்ள மரக் கிளையை தமிழர் ஒருவர் வெட்டினால் அவர் கைது செய்யப்பட்டு, அவர் சிறைக்குச் செல்ல நேரிடும். ஆனால், வடக்கில் மகாவலி வலயத்துக்குட்பட்ட 600 ஏக்கர் காணியைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் வெற்றிடமாக்கியுள்ளார்.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள காணி ஒன்றைப் பொலிஸார் துப்பரவு செய்துள்ளனர். காணி அபகரிப்பு நிறுத்தப்படும், காணி விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

ஆனால் பொலிஸார், முப்படையினர் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

11 பேர் பலியானமைக்கு விராட் கோலியின் அவசரமும் காரணம்- விசாரணையில் வெளியான தகவல்

11 பேர் பலியானமைக்கு விராட் கோலியின் அவசரமும் காரணம்- விசாரணையில் வெளியான தகவல்

காணி துப்பரவு பணி இடைநிறுத்தம்

இதன்போது கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 'ஓமந்தை பொலிஸ் நிலையம் தொடர்பில் இன்று காலையில் அறிந்தேன். இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். அந்தக் காணி துப்பரவு செய்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது." - என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., "மிக்க நன்றி. அரசு ஒரு கொள்கையில் செயற்பட்டாலும், வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகின்றார்கள். இவ்வாறான மாறுபட்ட கொள்கையினால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதைக் குறிப்பிட்டுக்கொள்கின்றேன். மகாவலி வலயத்துக்குட்பட்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்." - என்றார்.

selvam adaikalanathan

வழக்கு தாக்கல்

இதன்போது எழுந்து கருத்துரைத்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "600 ஏக்கர் அல்ல 46 ஏக்கர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர்தான் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை அழித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அந்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, இந்தச் சம்பவத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை." - என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், "மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழிகளில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அண்மையில் மன்னாரில் பொதுக் காணிகள் துளையிட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்." - என்றார்.

தொட்டுவிடும் தூரத்தில் மற்றொரு ஈரான் - இஸ்ரேல் யுத்தம்

தொட்டுவிடும் தூரத்தில் மற்றொரு ஈரான் - இஸ்ரேல் யுத்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US