11 பேர் பலியானமைக்கு விராட் கோலியின் அவசரமும் காரணம்- விசாரணையில் வெளியான தகவல்
இந்திய பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்துடன் ஆர்சிபியின் வீரர் விராட் கோலியின் லண்டன் பயணமும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாக அவசரமாக இந்த நிகழ்வை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி வழங்கவில்லை.
அணியின் நிர்வாகம் அழுத்தம்
எனினும் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதன் காரணமாகவே, அவசர அவசரமாக வெற்றி நிகழ்வை நடத்த, கர்நாடக மாநில கிரிக்கெட் நிர்வாகத்துக்கு, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல்.,கிண்ணத்தை ரோய்ல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எனப்படும், ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாடும் வகையில், 2025 ஜூன் 4ம் திகதியன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடத்தப்பட்டபோதே நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்




