இந்திய அணிக்கு அதிகரித்துள்ள வெற்றி வாய்ப்பு
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும், இன்றைய(06) இறுதிநாளில் இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சே இந்த வெற்றியை உறுதிசெய்யும் அதேநேரம் இங்கிலாந்து அணியின் சிறப்பான துடுப்பாட்டம், அந்த அணியில் தோல்வியை தடுக்க உதவும்.
போட்டியின் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நிறைவின்போது, இங்கிலாந்து அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் 3 விக்கட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றிருந்தது.
கடின இலக்கு
இதன்படி, இங்கிலாந்து அணி இந்தப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமானால் 536 ஓட்டங்களை பெறவேண்டும்.
முன்னதாக, இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 587 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து 427 ஓட்டங்களையும் பெற்றது. இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 407 ஓட்டங்களையும் பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
