செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் உடல் நல்லடக்கம்
புதிய இணைப்பு
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று (07.02.2024) மதியம் இடம் பெற்றது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளடங்கலாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து பூதவுடல் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு விடத்தல் தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84ஆவது வயதில் காலமானார்.
அவரது பூதவுடல் மன்னார், தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்னாரது பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 9 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri