மழைக்கு தப்பியோடி மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்கள்
மதவாச்சி - ரம்பெவெவ - வலிஓயா சந்தை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான 2 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.
இன்று நண்பகல் 12:30 மணிக்கும் பிற்பகல் 1:00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த 3 பெண்களும் தமது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, மழை காரணமாக அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கியிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் பலி
மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் உடனடியாக ரம்பேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இரண்டு பெண்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 61 மற்றும் 26 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 10 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri