ருவான்வெளிசேயாவில் ராமர் கோவில்! அரசாங்கம் விளக்கம்
இலங்கையில் பௌத்தர்கள் வெகுவாக போற்றும் ருவான்வெளிசேயா விகாரை அமைந்துள்ள பகுதியில் இந்து ஆலயம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்த சாசன, மத விவகார மற்றும் கலாச்சார அமைச்சர் இனிதும சுனில் செனவி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று பௌத்த மகாநாயக்க தேரர்களுடன் ஊடகவியலாளர்களை சந்தித்து தெளிவு படுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் ருவன்வெளிசேயா புனித பூமி பகுதியில் ராமர் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் இதற்கு இந்திய அரசாங்கம் நிதி வழங்குவதாகவும் தகவல்கள் பரிமாறப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் குறித்த புனித பூமி பகுதியில் மேற்கொள்ளும் சில அபிவிருத்திப் பணிகளை பிழையாக சிலர் அர்த்தப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசாங்கம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
பெளத்த சாசனத்திற்கு இந்த அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் பல பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தகவல்களை திரிபுபடுத்தி போாலி தகவல்களை சமூகத்திற்கு வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொடர்பில் பிழையான அர்த்தப்படுத்தல்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தெருக்கள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரட்நாயக்கவின் கையொப்பத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.
குறித்த புனித பூமிக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தவும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் எவ்வித பாதக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் போலி தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 1 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri