வடக்கு - கிழக்கில் பாதிக்கப்படும் கடற்தொழிலாளர்கள்! கவனம் செலுத்தாத அரசாங்கம் - செல்வம் அடைக்கலநாதன்

Mannar Selvam Adaikalanathan Sri Lanka Fisherman
By Ashik Oct 05, 2026 09:15 AM GMT
Report

நாட்டில் ஏற்படுகின்ற அனர்த்தங்களின் போது முதன் முதலில் கடற்தொழிலாளர்களை கடலுக்கு போக வேண்டாம் என அரசாங்கம் அறிவித்தல் வழங்குகின்ற போதும், தொழிலுக்குச் செல்லாத நிலையில் பாதிப்பை எதிர்கொள்ளும் அவர்களின் நலன் கருதி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் (05.10.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடலுக்கு போக வேண்டாம், புயல் வருகிறது, மழை பெய்கிறது என்றால் முதல் முதல் கடற்தொழிலாளர் சமூகம் தான் கடலுக்கு செல்லாது. அதை எத்தனை நாள் தொடர்ந்து அந்த அனர்த்தங்கள் இருக்கிறதோ, அத்தனை நாளும் அவர்கள் தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கின்ற ஒரு நிலை காணப்படுகின்ற போது, இந்த அரசாங்கம் கடற்தொழிலாளர்களுக்கான திட்டத்தை அறிவிக்காமல் இருப்பது கவலையளிக்கிறது.

ஏன் கருணை காட்டுகின்ற நிலை இல்லாது இருக்கிறது

ஏனென்றால் பாதிக்கப்படுவது கடற்தொழிலாளர் சமூகம். தொடர்ச்சியாக நடந்த இயற்கை அனர்த்தங்கள், அடிக்கடி புயல் வரப்போகிறது, கடல் கொந்தளிப்பு, போக வேண்டாம் என்று சொல்வதெல்லாம் உண்மையில் எங்களுடைய கடற்தொழிலாளர் சமூகத்திற்கு. அன்றாடம் கடலுக்கு போய் வாழ்கின்ற, பள்ளிக்கூட செலவுகள் இப்படி எல்லா செலவுகளையும் இந்த தொழிலின் ஊடாக சமாளித்துக் கொண்டிருக்கின்ற கடற்தொழிலாளர் சமூகத்திற்கு, இந்த அனர்த்தங்கள் வருகின்ற போது ஏன் கடந்த அரசாங்கங்களா இருக்கலாம், இந்த அரசாங்கங்களா இருக்கலாம், ஏன் கருணை காட்டுகின்ற நிலை இல்லாது இருக்கிறது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஜனாதிபதி கூட இங்கே வந்து உடனடியாக கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஒரு உத்தரவை சொல்லிப் போன பின்பும், இதுவரைக்கும் கடற்தொழிலாளர்களுக்கு இது சம்பந்தமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இல்லை. புயலால் பாதிக்கப்பட்டு வலைகள் துளைக்கப்பட்டு, கடலிலே வலைகள் காணாமல் போன கடற்தொழிலாளர்களுக்கு ஒரு நிவாரணம் வழங்கப்படவில்லை.

வடக்கு - கிழக்கில் பாதிக்கப்படும் கடற்தொழிலாளர்கள்! கவனம் செலுத்தாத அரசாங்கம் - செல்வம் அடைக்கலநாதன் | Selvam Aadikalanathan Mp Statement About Fishermen

நான் நினைக்கின்றேன் உடைந்த போட்கள் என்று அந்த நிலையிலே, ஒரு கிட்டத்தட்ட ஒரு 5, 10 போட்களுக்குள் தான் அந்த நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்கிறது. தொலைந்த வலைகளுக்கு நஷ்ட ஈடு இன்னும் கொடுக்கப்படவில்லை. இப்படி பல விதத்திலும் எங்களுடைய கடற்தொழிலாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 8ஆம் மாதம் இங்கே மீனவ உயர் அதிகாரிகள் ஒரு கூட்டத்தைப் போட்டார்கள். இப்பொழுது இரண்டு மாதம் தாண்டி இருக்கிறது.

அதில் அடுத்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த படாமல் இருப்பது கவலையளிக்கிறது. இங்கே வந்து கடற்தொழிலாளர்களை ஏமாற்றுகின்ற ஒரு நிலைப்பாட்டை செய்கிறார்களா என்ற ஒரு நிலையை நாங்கள் என்ன கூடியதாக இருக்கிறது. ஏனென்றால், இங்கே பாஸ் கொடுக்கப்பட்ட எங்களுடைய கடற்தொழிலாளர்களுக்கு பாஸ் மறுக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு சொல்லுகிறோம், நாளைக்கு சொல்லுகிறோம் என்ற ஒரு விதத்திலே அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அரசும் இந்த இரண்டு மாதங்கள் கழித்து நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சர் அவர்கள் அதில் அக்கறை கொண்டிருக்கிறாரா? என்பது தெரியாமல் இருக்கிறது. ஏனென்றால் அன்றாடம் என்னையும் வந்து சந்திக்கிறார்கள். அங்கே திணைக்களத்திற்கு, அதாவது மீனவ சங்க திணைக்களத்திற்கு ஒவ்வொரு நாளும் கடலுக்குப் போகாமல் அந்த திணைக்களத்திற்கு போய் வருகின்ற ஒரு நிலைதான் இப்பொழுது காணப்படுகிறது.

ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை

மேலதிகாரிகள் சொன்னால்தான் செய்ய முடியும் என்ற ஒரு நிலை இருக்கின்ற காரணத்தால், இந்த இரண்டு மாதங்களில் வந்து போன இந்த உயர் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர் உட்பட எல்லாரும் வந்து போனார்கள். ஆனால் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. ஆகவே, எங்களுடைய கடற்தொழிலாளர்களுக்கு உடனடியாக இந்த அனர்த்தங்கள் வருகின்ற போதெல்லாம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லுகின்ற போதெல்லாம், ஏதாவது ஒரு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

பாஸ் கொடுக்கப்பட்டு தொழிலுக்குச் சென்ற கடற்தொழிலாளர்கள் இப்பொழுது பாஸ் இல்லாது தொழில் செய்ய செல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். பாஸ் கொடுக்கப்படும் என்று தாங்கள் சென்று அதற்கான விவரங்களை அறிவிப்பதாக அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, இந்த விஷயத்தை நான் நாடாளுமன்றத்திலும் கொண்டு செல்ல இருக்கின்றேன்.

ஆகவே, எங்களுடைய கடற்தொழிலாளர்களை துன்பப்படுத்த வேண்டாம் என்பதை நான் ஜனாதிபதிக்கு, இந்த அரசாங்கத்திற்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லவில்லை. எங்களுடைய நாட்டிலே இருக்கிற அனைத்து கடற்தொழிலாளர்களும், அனர்த்தத்தால் தொழிலுக்கு செல்லாமல் இருக்கின்ற மீனவ சமூகம், தன்னுடைய அன்றாட பிள்ளைகளுடைய கல்வி, ஏனைய விடயங்களிலே தங்களுடைய உழைப்பைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

வடக்கு - கிழக்கில் பாதிக்கப்படும் கடற்தொழிலாளர்கள்! கவனம் செலுத்தாத அரசாங்கம் - செல்வம் அடைக்கலநாதன் | Selvam Aadikalanathan Mp Statement About Fishermen

ஆகவே அரசாங்கம் இதில் அடுத்த வரவு செலவுத் திட்டத்திலேயாவது இந்த அறிவிப்பை,நிவாரணம் கொடுக்கும் அறிவிப்பை உடனடியாக செய்ய வேண்டும். "இந்நாட்டிலே வருமானத்தை ஈட்டுகின்ற ஒரு தொழில் இந்த கடல் தொழில். ஆகவே வருமானத்தை, இந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தொழிலைச் செய்கின்ற என்னுடைய கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிக மிக கவலை தருகின்ற விடயமாக இருக்கிறது.

ஆகவே இந்த அரசு, மக்களுக்காகச் செயல்படுகின்றது என்று சொல்லுகின்ற அரசு, உடனடியாக எங்களுடைய கடற்தொழிலாளர்களுடைய எதிர்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இச்சந்தர்ப்பத்திலே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்." அமைச்சர் அவர்கள் எங்களது கடற்தொழிலாளர்களை ஏமாற்றுகிறார். தொடர்ந்து இந்திய இழுவைப்படகுகளின் (டிரோலர்) வருகை மிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனால் அதைப் பேசித் தீர்ப்போம் என்று சொல்லி ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், எங்களுடைய கடற்தொழிலாளர்களுடைய கஷ்டத்திலே அவர்கள் அரசியல் நடத்துவதாகத் தான் தெரிகிறது. ஏனென்றால், இந்திய இழுவைப்படகுகள் வருகின்ற போது எங்களுடைய கடற்தொழிலாளர்ர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முனைகின்ற போது, அதை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் பேசுவோம் அல்லது இந்திய இழுவைப்படகுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் மூர்க்கத்தனமாக பேசுகின்ற இந்த விடயங்கள் நடைமுறையில் சாத்தியமற்ற விடயங்களைத் தான் காணப்படுகிறது.

இந்தியா செல்லுகின்ற போதெல்லாம் எங்களுடைய ஆலோசனையை நான் முன்வைக்கின்றேன். அதாவது ஆழ்கடல் தொழிலை எங்களுடைய கடற்தொழிலாளர்களுக்கும், இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் அறிமுகம் செய்து, அவர்களுக்கான உதவியை செய்கிற சூழல் ஏற்படுமாக இருந்தால், இங்கே இந்திய கடற்தொழிலாளர்கள் எங்களுடைய எல்லைக்குள் வருகின்ற வாய்ப்பு மிக மிகக் குறைவாக இருக்கும். எங்களுடைய கடற்தொழிலாளர்களும் ஆழ்கடலிலே சென்று மீன் பிடிக்கும் வருவாயைக் காட்டுகின்ற ஒரு வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

2027இல் குறையும் வரிகள் : அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதி

2027இல் குறையும் வரிகள் : அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதி

ஞானசாரருக்கு இன்றிலிருந்து மீண்டும் 6 வருட சிறை! சற்று முன்னர் வெளியான உத்தரவு

ஞானசாரருக்கு இன்றிலிருந்து மீண்டும் 6 வருட சிறை! சற்று முன்னர் வெளியான உத்தரவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US