டின் மீன் உற்பத்தியில் தன்னிறைவடைந்துள்ள இலங்கை
டின் மீன் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு அடைந்துள்ளதாக மீன்பிடி ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஒரு வருடத்திற்கு தேவையான 2 லட்சத்து 75 ஆயிரம் டின் மீன் கலன்கள், இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு இலங்கையில் 90 ஆயிரம் டின் மீன்கள் கலன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டு 36 ஆயிரத்து 806 டின் மீன் கலன்களை இறக்குமதி செய்ய 13.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு 26 ஆயிரத்து 44 டின் மீன் கலன்களை இறக்குமதி செய்ய 10.76 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2021 ஆம் ஆண்டு வரை 8 ஆயிரத்து 758 மெற்றி தொன் டின் மீன் கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதற்காக 4.8 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனவும் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.